நிரந்தரவாச விண்ணப்பத்தில் தவறான தகவல்: ஆடவருக்கு சிறை

நிரந்தரவாச விண்ணப்பத்தில் தவறான தகவல்: ஆடவருக்கு சிறை

1 mins read

மூன்று பிள்ளைகளின் சிங்கப்பூர் நிரந்தரவாச விண்ணப்பப் படிவத் தில் அவர்கள் மூவரும் தனது சொந்த பிள்ளைகள் என்று கடை உதவியாளரான 44 வயது நூர் ஷாஹுல் ஹமீது நூர்சுல்தான் என்ற இந்திய நாட்டவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் நிரந்தரவாசியான திரு நூர்சுல்தானுக்கு 2008ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி விண்ணப்பப் படிவத்தில் தவறான தகவல் அளித்த குற்றத்திற்காக இரண்டு வாரச் சிறை தண்டனை நேற்று விதிக்கப்பட்டது. அவரது குற்றம் பல ஆண்டு களுக்குப் பிறகு அறியப்பட்டது. அந்த மூன்று பிள்ளைகளும் அவ ரது சகோதரியின் குழந்தைகள் என்றும் அவர்களைத் தான் தத்து எடுத்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. மூவரில் இருவர் ஆண்கள் என்றும் 23 மற்றும் 21 வயதுடைய அவர்கள் தேசிய சேவையும் புரிந் துள்ளனர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மற்றொருவர் 14 வய துடைய பெண்மணி. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் நிரந்தரவாச தகுதி கிடைத்தது.