பரவலான நோய்களைக் கையாள கூட்டு முயற்சி

பரவலான நோய்களைக் கையாள கூட்டு முயற்சி

1 mins read
f6b5dc6f-5935-45b0-bc6b-8b98377143e0
-

நீரிழிவால் பாதிக்கப்பட்டோர் ரத் தச் சர்க்கரை அளவைப் பரிசோ திக்க, வருங்காலத்தில் மருந்தகத் திற்குச் செல்ல வேண்டிய அவ சியம் இருக்காது. வீட்டில் இருந்த படியே, தொலை தொழில்நுட்பத்தின் மூலம் இதைச் செய்திட முடியும். வருங்காலத்தின் நீரிழிவு மருந் தகம் இப்படித்தான் திட்டமிடப்படு கிறது. சிங்கப்பூர் பொது மருத் துவமனையில் அமைந்திருக்கும் சிங்ஹெல்த்தின் நீரிழிவு, வளர் சிதை மாற்ற நிலையத்தில் இப் புதிய அணுகுமுறை அமலாக்கப் படும். நீரிழிவின் பராமரிப்பை மேம் படுத்த திறன்மிகு தொழில்நுட்பங் களை நிலையம் பயன்படுத்தும். நீரிழிவால் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தைக் கணிப்பது முதல், நீரிழிவின் கண்காணிப்பு, சிகிச்சை, கட்டுப்பாடு வரை எல்லா அம்சங்களிலும் தொழில்நுட்பம் புகுத்தப்படும். இதன்வழி சேகரிக்கப்படும் தரவு, நோயாளியின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான ஆய்வுக ளுக்குப் பயன்படுத்தப்படும் என அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பின் (ஏ-ஸ்டார்) நிர்வாக இயக்குநர் டாக்டர் பெஞ்சமின் சீட் கூறினார். நீரிழிவைக் கையாளப் போகும் திறன்மிகு தொழில் நுட்பத்தை ஒட்டுமொத்த சுகாதாரப் பராமரிப்பு முறையிலும் அமலாக்கு வது ஆய்வாளர்களின் இலக்கு.

ஆய்வுக்கூடங்களில் மேற்கொள்ளப்படும் நீரிழிவு தொடர்பான தொழில்நுட்பச் சோதனையைப் பார்வையிடுகிறார் வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்