சிங்கப்பூர்=கோலாலம்பூர் அதிவேக ரயில் சேவையில் 30 நிமிடத்துக்கு ஒரு ரயில்

சிங்கப்பூர்=கோலாலம்பூர் அதிவேக ரயில் சேவையில் 30 நிமிடத்துக்கு ஒரு ரயில்

1 mins read

சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக் கும் இடையிலான அதிவேக ரயில் சேவை அறிமுகம் காணும்போது 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் வந்து செல்லும் என்று தெரிவிக் கப்பட்டு உள்ளது. இச்சேவை குறித்த விவரங் களை MyHSR Corp நிறுவ னத்தின் திட்ட ஒப்படைப்பு இயக் குநர் மார்க் லோடர் நேற்றுக் காலை மலேசியாவின் சிரம்பா னில் செய்தியாளர்களிடம் விளக் கினார். "மலேசியாவின் பண்டார் மலே சியா ரயில் நிலையத்திலிருந்து சிங்கப்பூரின் ஜூரோங் ஈஸ்ட் வரையிலான அந்த ரயில் சேவை யில் இடைநிறுத்தம் இருக்காது. மொத்த பயண நேரம் 90 நிமிடங் களாக இருக்கும். "பண்டார் மலேசியா நிலையத் தில் அந்த அதிவேக ரயிலில் ஏறும் முன்னர் பயணிகள் அங் குள்ள சிங்கப்பூர் குடிநுழைவுத் துறையின் அனுமதியைப் பெற வேண்டும். "அதிவேக ரயில் சேவை தவிர சிங்கப்பூருக்கான உள்ளூர் ரயில் சேவையும் இருக்கும். அச் சேவையிலும் 30 நிமிடத்துக்கு ஒரு ரயில் இருக்கும். அந்த ரயில் இரு நாடுகளின் இடையில் உள்ள ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.