தங்கள் நிர்வாகக் குழுத் தலை வராகப் பல்லாண்டு காலம் சிறந்த சேவையாற்றிய 69 வயது திருமதி கல்யாணி ராமசாமி கடந்த வியா ழக்கிழமை காலமானதையொட்டி, அவரது தகனச் சடங்குகள் முடி வுறும் வரை ஆலயத்தை மூடிவைக் கலாம் என்று அதன் தலைமை அர்ச்சகர் கூறிய ஆலோசனையின் படி, ஒன்றரை நாட்களுக்கு ஆல யம் மூடப்பட்டது என்று யீஷூன் அவென்யூ 3ல் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய நிர்வாகக் குழு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், "ஒன்றரை நாட்க ளுக்கு ஆலயத்தை மூடியதால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அசௌகரியங்களுக் கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்," என்று அறிக்கை யில் கூறப்பட்டது. "மறைந்த எங்கள் நிர்வாகக் குழுத் தலைவரின் தகனச் சடங்கு கள் முடிவடையும் வரை ஆலயத் தில் இயல்பான பூஜைகள் 7ஆம் தேதி மாலை முதல் 8ஆம் தேதி முழுவதும் நிறுத்தி வைக்கப்படலாம் என்றும் இந்த முடிவை ஆகம விதிமுறைகளின்படி ஏற்றுக்கொள் ளலாம் என்றும் தலைமை அர்ச்ச கர் கூறினார்.

