போலிசார் விரட்டியும் காரை நிறுத் தாமல் அராப் ஸ்திரீட்டிலிருந்து பாசிர் ரிஸ் வரை காரை ஓட்டிச் சென்றுள்ளார் 64 வயது பெண். மது அருந்தி விட்டு போதையில் காரை ஒருவர் கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்றதாக கடந்த வியா ழக்கிழமை இரவு 11.05 மணிக்கு போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அராப் ஸ்திரீட்டிற்கு விரைந்த போலிஸ், அந்தப் பெண்ணைக் கைது செய்ய முனைந்தபோது காரை வேகமாகச் செலுத்தி அந்த இடத்திலிருந்து தப்பினார். 18 கிலோமீட்டர் தூரம் வரை போலிஸ் விரட்டியும் குடிபோதை யில் காரை நிறுத்தாமல் சென்றார் அந்தப் பெண். பாசிர் ரிஸ் பகுதியில் போக்கு வரத்துக்கு எதிர்திசையில் அவர் காரை ஓட்டிச் சென்றபோது போலிஸ் அவரை மடக்கியது. குடிபோதையில் காரை ஓட்டி யதற்காகக் கைது செய்யப்பட்ட அவரை போலிஸ் விசாரித்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 64 வயது பெண்
1 mins read

