இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வளர்க்கும் யோச னைகளைச் செயற்படுத்த யூனோஸ் குடியிருப்பாளர்கள் அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து புதிய மானியத்திற்கு விண்ணப்பம் செய் யலாம். சமூக ஒருங்கிணைப்பு ஆதார நிதிக்காகச் சுமார் $5,000 ஒதுக் கப்பட்டிருப்பதாக அல்ஜுனிட் குழுத்தொகுதி அடித்தள அமைப்பு களின் ஆலோசகர் திரு சுவா எங் லியோங் தெரிவித்தார். யூனோஸ் சமூக மன்றத்தில் நேற்று நடைபெற்ற 'பிரானக்கான்' மரபுடைமைப் பாதை அறிமுக நிகழ்ச்சியில் புதிய மானியம் பற்றி அவர் அறிவித்தார். சமூக மன்ற நிர்வாகக் குழு வின் கடந்த காலச் சேமிப்பிலிருந்து நிதியளிக்கப்படும் புதிய மானியம், சுமார் 44,000 குடியிருப்பாளர்கள் வசிக்கும் யூனோஸ் தொகுதிப் பிரிவில் மட்டுமே தொடக்கமாகக் கிடைக்கும்.
அல்ஜுனிட் குழுத் தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் திரு சுவா எங் லியோங், முதியவர்கள் பளிங்குத் கற் களில் வண்ணம் தீட்டுவதைப் பார்வையிடுகிறார். படம்: மக்கள் கழகம்

