சந்தைக்குள் நுழைந்த கார்: மூவர் காயம், ஓட்டுநர் கைது

சந்தைக்குள் நுழைந்த கார்: மூவர் காயம், ஓட்டுநர் கைது

1 mins read
03096ed5-873b-4cb2-8e30-6e83be939aaf
-

மரின் பரேட்டில் உள்ள சந்தைக் குள் நேற்று பிற்பகல் வேளையில் ஒரு கார் நுழைந்ததில் மூவர் காயமடைந்தனர். காரின் ஓட்டுநர் பின்னர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் மரின் டெரஸ், புளோக் 50A-இல் உள்ள சந்தை யில் பிற்பகல் சுமார் 12.30 மணிக்கு நிகழ்ந்தது. 51 வயது ஓட்டுநர் ஒருவர் தனது காரைக் கட்டுப்படுத்தத் தவறியதால் அது சாலை ஓரத்தைத் தாண்டி சந்தையின் பூக்கடைக்குள் மோதி நின்றது. எய்லின் பூக்கடையைக் கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தி வரும் அதன் உரிமையாளரான 58 வயது திருவாட்டி இயோ லீ எங், கடையின் உதவியாளரான ஆ ஹை, கடைக்கு பூ வாங்க வந்த பணிப்பெண் ஆகியோர் காயம டைந்தனர். "எனது தாயார் சுயநினைவின்றி சாங்கி பொது மருத்துவமனைக் குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு நினைவு திரும் பியது. இப்போது என் அம்மா இயல்பாகப் பேசுகிறார். ஆனால், அவர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை," என்று அவரது மகளான 36 வயது கேரன் டிங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரி வித்தார்.

சந்தைக்குள் நுழைந்த கார் அங்கிருந்த பூக்கடைக்கு சேதத்தை ஏற்படுத்தியது. படம்: ‌ஷின் மின் வாசகர்