போலிசுக்கு எதிரான நியாயமற்ற கருத்துகள் நிராகரிக்கப்படவேண் டும். தங்கள் உயிரை பணயம் வைத்து சிங்கப்பூரை பாதுகாக்க பாடுபடும் போலிஸ் அதிகாரி களுக்கு இத்தகைய கருத்துகள் பெரிய அளவில் பாதகமாகிவிடும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் நேற்று தெரிவித்தார். பல நாடுகளில் போலிஸ் அதி காரிகளுக்கு எதிரான நியாய மற்ற தாக்குதல்கள் காரணமாக கடைசியில் சட்ட அமலாக்கம் பல வீனம் அடைந்துவிடும் நிலை ஏற் பட்டு இருக்கிறது என்று ஃபேஸ் புக் பக்கத்தில் நேற்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இத்தகைய ஒரு நிலை சிங்கப்பூரில் ஏற்பட நாம் விரும்பவில்லை என்றார் அவர். சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட நாம் எடுத்துவரும் அணுகு முறைக்கு மிகப் பெரும்பான்மை சிங்கப்பூரர்கள் ஆதரவு தருகிறார் கள் என்று தான் நம்புவதாகவும் திரு சண்முகம் குறிப்பிட்டார். சட்டவிரோத பாலியல் விடுதி களில் அண்மையில் போலிசார் நடத்திய சோதனைகள் சரியா னதே என்று ஃபேஸ்புக் பக்கத் தில் அமைச்சர் சனிக்கிழமை குறிப்பிட்டு இருந்தார்.
அத்தகைய விடுதிகளில் முக மூடிகளை அணிந்துகொண்டு கதவுகளை உடைத்து போலிசார் சோதனை நடத்தியது தவறு என்று பொருள்படும் வகையில் இணையத்தில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் தொடர்பில் அமைச்சர் கருத்துரைத்தார்.

