'ரயில் பயணத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கும் பயணிகள்'

'ரயில் பயணத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கும் பயணிகள்'

1 mins read

பெருவிரைவுப் போக்குவரத்து வண்டிகளில் பயணம் செய்ய விரும்புவோர் எதிர்பாராத தாம தங்களைக் கருத்தில் கொண்டு தங்களது பயண நேரத்தைத் திட்டமிடுவதாக எம்ஆர்டி சேவையின் நம்பகத்தன்மை மீதான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இந்த ஆய்வை 'மூவிட்' செயலி மூலம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்ற மாதம் 30ஆம் தேதி முதல் இம்மாதம் நான்காம் தேதிவரை நடத்தியது. ஆய்வில் பங்கேற்ற 711 பேரில் 30 விழுக்காட்டினர் 10 நிமிடங்களையும் 20 விழுக்காட்டினர் 20 நிமிடங்கள் வரையும் 14 விழுக்காட்டினர் 30 நிமிடங்களுக்கும் அதிகமான கூடுதல் நேரத்தையும் ஒதுக்கி பயணத்தைத் திட்டமிடுவதாகக் கூறியுள்ளனர். ரயில் சேவையின் நம்பகத்தன்மை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேம்படும் என 35 விழுக்காட்டினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.