பாதசாரியைக் குத்திய மின்-ஸ்கூட்டர் ஓட்டுநருக்கு 10 வாரச் சிறை

பாதசாரியைக் குத்திய மின்-ஸ்கூட்டர் ஓட்டுநருக்கு 10 வாரச் சிறை

1 mins read

ரிவர்வேல் வாக் பகுதியில் உள்ள புளோக் 110க்கு அருகே கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி திரு ஜொனத்தன் மார்க் டான் வெய் வென் எனும் 24 வயது ஆடவர் மின்-ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றார். 29 வயது ஜோ‌ஷுவா ஷேன் இங் செங் வெய் எனும் பாதசாரி மீது மோதுவதைத் தவிர்க்கும் முயற்சியில் கீழே விழுந்த திரு டான், தனது மின்- ஸ்கூட்டரையும் சேதப்படுத்தினார். அதற்கு திரு இங்கிடம் இழப்பீடு கேட்டு சண்டையிட்டதோடு அவரது தலையில் குத்தினார் திரு டான். திரு இங்கைத் தரையோடு பிணைத்து முழங்காலால் அமுக்கி முகத்திலும், தலையிலும் மாறி மாறித் தாக்கினார். பாதசாரிகள் இடைமறித்தும் திரு டான் கேட்கவில்லை. இதன் காரணமாக திரு இங்கின் மூக்கு, வலது கண் குழி ஆகியவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக திரு இங் $505 செலவிட்டார். அதில் $250ஐ திரு டான் திருப்பிக் கொடுத்துவிட்டார். திரு டானுக்கு 10 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.