பிரதமர் சார்பில் பிரான்ஸ் மாநாட்டில் கலந்துகொள்கிறார் ஜோசஃபின் டியோ

பிரதமர் சார்பில் பிரான்ஸ் மாநாட்டில் கலந்துகொள்கிறார் ஜோசஃபின் டியோ

1 mins read

பிரான்சில் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் 'ஒன் பிளானட்' உச்சநிலை மாநாட்டில் பிரதமரின் சார்பில் சிறப்புப் பிரதிநிதியாக பிரதமர் அலுவலக அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ கலந்துகொள்கிரார். பருவநிலை மாற்றத்தின் தொடர்பிலான பாரிஸ் ஒப்பந்தத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த மாநாட்டில் திருவாட்டி டியோ கலந்து கொள்வதன் மூலம் பாரிஸ் ஒப்பந்தத்தின் மீதான சிங்கப்பூரின் கடப்பாடு மறுஉறுதி செய்யப்படுகிறது.