கார் உரிமையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் தங்களின் கார்களைப் பராமரிப்புச் சேவை களுக்காக அவர்கள் விரும்பும் பட்டறைக்கு எடுத்துச் செல்லலாம். அவ்வாறு செய்தால் உத்தர வாதம் பாதிப்படையுமோ என்ற அச்சம் தேவையில்லை என்று சிங்கப்பூர் வணிகப் போட்டித் தன்மை ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. தற்போது நடப்பில் உள்ள உத்தரவாதக் கட்டுப்பாட்டின்படி கார்களை அங்கீகரிக்கப்பட்ட பட்டறைகளுக்கு மட்டுமே எடுத் துச் செல்லமுடியும். தனிப்பட்ட பட்டறைகளில் சேவைக்கு எடுத்துச் சென்றால் உத்தரவாதம் செல்லுபடியாகாது. இந்த மாற்றம் ஏற்கெனவே உள்ள உத்தரவாதங்களையும் புதியவையையும் பாதிக்கும். கார் பாகங்களின் விநியோகம் பற்றிய விசாரணையின் முடிவில் ஆணையம் இந்த புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
கார் சேவை, பழுது, பாகங்களுக்கான உத்தரவாதக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. கோப்புப்படம்.

