சாங்கி பொது மருத்துவமனை, சாங்கி விமான நிலையக் குழுமம், சிடிஎல், என்டியுசி கிளப், ரோபோடிக்ஸ் ஆட்டோமேஷன் செண்டர் ஆஃப் எக்செலன்ஸ், ஸ்போர்ட்ஸ் ஹப், தி எஸ்பிளனேட் ஆகிய 7 அமைப்புகளில் துப்புரவுத் துறையில் புதிய தொழில்நுட்பங் களைப் பரிசோதனை முறையில் செயல்படுத்த தேசிய சுற்றுப்புற வாரியம் திட்டமிடுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 30,000 பேர் துப்புரவுத் துறையில் அதிக திறன்பெற்ற பணியாளர் களாக இருப்பர் எனவும் வாரியம் கூறியது. தேசிய சுற்றுப்புற வாரியத்துக் கும் மேலே குறிப்பிட்ட ஏழு நிறுவனங்களுக்கும் இடையிலான பங்காளித்துவத்தை அதிகாரபூர்வ மாக்கும் விதத்தில் நேற்று இணக் கக் குறிப்புகள் கையெழுத்தாகின. சாங்கி விமான நிலையத்தில் உள்ள கிரௌன் பிளாசாவில் நேற்று நடைபெற்ற 'ஐடிஎம்' எனப்படும் சுற்றுச்சூழல் சேவைகள் தொழில்துறை மாற்ற வரைபடத் தின் தொடக்க நிகழ்ச்சியில் 'இன்குபேட்' எனப்படும் சுற்றுப்புறச் சேவைகளுக்கான புத்தாக்க, சிறந்த தானியக்க சீரமைப்புத் தொழில்நுட்பங்கள் பங்காளித் துவம் உறுதிசெய்யப்பட்டது.
சாங்கி விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் இருக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட பாத்திரம் கழுவும் இடத்தை சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (முன் வரிசையில் வலமிருந்து இரண்டாவது) பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

