தற்காப்பு அமைச்சு இணையத் தளம், தேசிய சேவை இணைய வாயில் உள்ளிட்ட தற்காப்பு அமைச்சின் எட்டு இணையப் பாது காப்பு கட்டமைப்பு முறைகளில் உள்ள குறைபாடுகளைக் கண்ட றிந்து, இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக உள்ளூர், அனைத்துலக ஊடுருவிகள் 300 பேருக்கு அமைச்சு அழைப்பு விடுக்கவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நிபுணர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை, அந்த இணையத் தளங்களுக்குள் ஊடுருவி, குறைபாடுகளைக் கண்டறிய முயல்வர். கண்டுபிடிக்கப்படும் குறைபாடு களின் தன்மையைப் பொறுத்து அந்த இணைய ஊடுருவிகளுக்கு $150 முதல் $20,000 வரை வெகுமதி வழங்கப்படும்.
இணைய ஊடுருவிகள் 300 பேருக்கு அழைப்பு
1 mins read

