பசுமை வாழ்க்கை முறைக்கு உதவ புதிய செயலி உதயம்

பசுமை வாழ்க்கை முறைக்கு உதவ புதிய செயலி உதயம்

1 mins read
a230aedc-362e-4236-8b2a-5f38d0169046
-

சிங்கப்பூர் சுற்றுப்புற மன்றம் புதிய செயலி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் மறுபயனீட்டு இடத்தையும் விரை வில் இடம்பெறவிருக்கும் கடற் கரை துப்புரவு போன்ற பசுமை நடவடிக்கைகளையும் பற்றி பொது மக்கள் தெரிந்துகொள்ள அந்தச் செயலி உதவும். அந்தப் புதிய செயலிக்கு 'SEC Green Map' என்று பெயர். பசுமை வாழ்க்கை முறையை மக்கள் பின்பற்றுவதற்கு ஊக்குவிக்கக் கூடிய, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தயாரிப்புப் பொருட்களையும் அந்தச் செயலியில் தெரிந்து கொள்ளலாம். புதிய செயலி அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் மேம்படுத் தப்படும். அதில் தனிப்பட்டோருக் கான கரிமக் கணக்கீட்டு வசதி களும் இருக்கும். புதிய செயலி தொடக்க நிகழ்ச்சியில் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி உரையாற்றினார். பசுமை வாழ்க்கை முறை யைப் பின்பற்றும்படி பொதுமக் களை அவர் ஊக்கமூட்டினார். சிறிய தீவான சிங்கப்பூர் பருவநிலை மாற்றங்களின் விளைவுகளால் எளிதில் பாதிக் கப்படக்கூடிய நிலையில் இருப்பதை அவர் சுட்டினார். நிறுவனங்களும் பருவநிலை மாற்ற விளைவுகளைப் பரிசீ லித்து தங்கள் கரிமக் கழிவு களைக் குறைத்துக்கொள்ள நட வடிக்கைகளை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.

புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் SEC Green Map என்ற பசுமை வாழ்க்கை முறை செயலி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்