கூட்டுரிமை வீடுகள் மறுவிற்பனை விலை கூடியது

கூட்டுரிமை வீடுகள் மறுவிற்பனை விலை கூடியது

1 mins read

சிங்கப்பூரில் தனியார் கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகளின் மறுவிற்பனை விலை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பரில் 0.5% அதிகரித்ததாக எஸ்ஆர்எக்ஸ் சொத்துச்சந்தை நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு நவம் பருடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பரில் இந்த வீடுகளின் மறுவிற்பனை விலை 6.2% அதிகம். இந்த ஆண்டில் இன்றைய தேதியில் பார்க்கையில், இத்தகைய வீடுகளின் மறுவிற்பனை விலைகள் 2017 ஜனவரி முதல் 5% அதிகரித்தது. இதனிடையே, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், சுமாங் வாக்கில் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகளைக் கட்டுவதற்கான இடத்தை பொது ஏலக் குத்தகை மூலம் விற் பனைக்கு விட்டிருக்கிறது. அந்த இடத்தில் சுமார் 820 வீடுகளைக் கட்டலாம்.