இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் சிங்கப்பூரர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகலில் 'ஸ்டேட் ஹைவே 6, ருவாதாபு ரோடு' விரைவுச் சாலையில் ஏற்பட்ட அந்தச் சம்பவத்தில் திரு சியாவ் காய் யுவான் மரணமடைந்தார். தெற்கு தீவின் மேற்கு கரையோரப் பகுதியில் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய மேலும் இருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மரணமடைந்த ஆடவர் விபத்தில் சிக்கிய இரு கார்களில் ஒன்றை ஓட்டிச் சென்றார் என்று நம்பப்படுகிறது. விபத்து ஏற்பட்ட காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் விசாரணை நடந்து வருவதாகவும் போலிசார் கூறியதாக நியூசிலாந்து செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு மரணமடைந்த ஆடவரின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவியையும் ஆதரவையும் அளித்துவருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
நியூசிலாந்து கார் விபத்தில் சிங்கப்பூர் ஆடவர் மரணம்
1 mins read

