சட்டத்திற்கு விரோதமாக வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதற்காக 25 வயது மாணவர் ஹரி குமார் அன்பழகனுக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழில் புரிந்த 16 வயது பெண்ணுடன் சென்ற ஆண்டு மே மாதம் பாலியல் உறவு கொண்டதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடமுடியாத அந்தப் பெண்ணிடம் மேலும் நான்கு ஆடவர்கள் பாலியல் உறவு கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவும் கை பேசியையும் வாங்க பணம் தேவைப்பட்டதால் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.
வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் உறவு: ஆடவருக்கு 10 மாத சிறை
1 mins read

