சோதனைச் சாவடிகளில் போக்குவரத்தை சீராக்க முயற்சி

சோதனைச் சாவடிகளில் போக்குவரத்தை சீராக்க முயற்சி

1 mins read
8cfd63ea-179e-40f8-810e-86dc344d93de
-

எதிர்வரும் கிறிஸ்மஸ், புத்தாண்டு விழாக்காலத்தில் சிங்கப்பூரின் நிலவழிச் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்தைச் சீராக்க முயற்சி எடுக்கப்படும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. விழாக்காலத்தில் நிலவழிச் சோதனைச்சாவடிகளில் போக்கு வரத்து வழக்கத்துக்கு மாறாக அதிக நெரிசலாக இருக்கும். உட்லண்ட்ஸ், துவாஸ் சோ த னை ச் சா வ டி க ளை நாள்தோறும் கிட்டத்தட்ட 400,000 பேர் கடந்து செல்வது வழக்கம். கிறிஸ்மஸ், புத்தாண்டு விழாக் காலத்தில் நாள்தோறும் கூடுதலாக 30,000 பேர் சோதனைச்சாவடி களைக் கடந்து செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சோதனைச்சாவடி யைக் கடந்து செல்ல வாகனங் களில் பயணம் செய்வோரின் காத்திருப்பு நேரத்தை நியாயமான தாக வைத்துக்கொள்ள முயற்சி எடுக்கப்படும் என்று ஆணையம் கூறியது.

போக்குவரத்தைச் சீராக்க முயற்சிகள் எடுக்கப்படும் அதே வேளையில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்