இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த் தாவில் இம்மாதம் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடை பெற்ற உலக நினைவாற்றல் விரு துப் போட்டிகளின் ஒரு பிரிவில் சிங்கப்பூரின் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர் துருவ் மனோஜ் வென்று உலக சாதனை நிகழ்த்தி உள்ளார். செம்பவாங் தொடக்கப் பள் ளியில் 5ஆம் வகுப்பில் பயிலும் 11 வயது துருவ், 'பெயர்கள் மற்றும் முகங்கள்' எனும் பிரிவில் பங் கேற்ற 20 மாணவர்களைத் தோற் கடித்து வென்றார். போட்டியில் பங்கேற்ற அனைத் துலக மாணவர்கள் திரையில் காட்டப்படும் 240 பெயர்களையும் முகங்களையும் 15 நிமிடங்களுக் குள் ஞாபகப்படுத்திகொள்ள வேண்டும்.
பின்னர் கொடுக்கப் படும் 30 நிமிடங்களுக்குள் அந்தப் பெயர்களையும் அதற்கேற்ற முகங் களையும் வரிசைப்படுத்த வேண் டும். இப்போட்டியில் துருவ், கொடுக்கப்பட்ட 240 பெயர்கள், முகங்களில் 96 பெயர்களையும் அதற்கேற்ற முகங்களையும் சரி யாக வரிசைப்படுத்தினார். இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட உலகச் சாதனைக்குரியவர் இந் தோனீசிய மாணவரான ஷஃபா அனிசா ரஹ்மதானி அரியனாத்தா.
2015ஆம் ஆண்டில் ஹாங்காங் கில் நடைபெற்ற போட்டியில் அந்த 11 வயது மாணவர், 240ல் 88 பெயர்களையும் முகங்களையும் வரிசைப்படுத்தி, அச்சாதனையை நிகழ்த்தினார். ஜகார்த்தா போட்டியின் ஒட்டு மொத்த புதிய உலக சாதனை யாளர் என்ற பெருமையைப் பெற் றார் மங்கோலியாவின் 23 வயது யன்ஜா வின்டர்நோல். அவர் மொத்தம் 212 பெயர்களையும் முகங்களையும் சரியாக வரிசைப் படுத்தினார். சிங்கப்பூரைப் பிரதிநிதித்து ஐந்து மாணவர்கள் ஜகார்த்தா சென்றனர்.
நினைவாற்றல் போட்டியில் தனது பிரிவில் பங்கேற்ற 20 போட்டியாளர் களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார் துருவ் மனோஜ். படம்: சிங்கப்பூர் நினைவாற்றல் விளையாட்டுச் சங்கம்

