நட்பைப் பலப்படுத்திக்கொண்ட பழைய நண்பர்கள்

நட்பைப் பலப்படுத்திக்கொண்ட பழைய நண்பர்கள்

1 mins read
ee68ad4f-47dd-4ff9-a4ab-6b80f1b9b939
-

இம்மாதம் 12 முதல் 14ஆம் தேதி வரை இந்தியாவுக்கு மூன்று நாள் பணி நிமித்த பயணம் மேற் கொண்ட ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் நேற்று முன்தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். நீண்டநாள் நண்பர்களான இரு வரும் கலகலப்பாக பல விவகாரங் கள் பற்றி உரையாடினார்கள் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது. இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களின் சந்திப்புகள் தொட ரில் இது ஆக அண்மையிலானது என்று குறிப்பிட்ட அமைச்சு, குஜராத் மாநில முதலமைச்சராக திரு மோடி இருந்த காலத்திலி ருந்தே அவரும் திரு கோவும் நண்பர்களாக இருந்து வருகின்ற னர் என்றும் சொன்னது. இருவரும் தங்களின் நீண்ட கால நட்பை மறுவுறுதிப்படுத்திக் கொண்டதுடன், இந்தியாவின் உள்நாட்டு மாற்றங்கள் மற்றும் உலகளாவிய மேம்பாடுகள் பற்றி கருத்துப் பரிமாற்றம் நடத்தினர்.

நேற்று முன்தினம் இந்தியப் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார் சிங்கப்பூரின் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் (இடது). படம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு