மானபங்கம், அத்துமீறி நுழைதல்: பொறியாளருக்கு சிறை, அபராதம்

மானபங்கம், அத்துமீறி நுழைதல்: பொறியாளருக்கு சிறை, அபராதம்

1 mins read
ad3db4a1-3657-41d2-a64c-76a3995467c0
-

பேருந்தில் பயணம் செய்யும்போது, 23 வயது பெண்ணை மானபங்கம் செய்ததுடன் அவர் பேருந்திலிருந்து இறங்கியதும் அவரைப் பின் தொடர்ந்து சுவா சூ காங்கில் உள்ள வீவக வீட்டின் மின்தூக்கியில் மீண்டும் அவரை மானபங்கப் படுத்திய 33 வயது பொறியாளருக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய நாட்டவரான 33 வயது பிரபு நடராஜன் (படம்), அதே பேட்டையில் வீவக வீட்டுக்கு வெளியே உள்ள பொது நடைபாதையில் சென்று அங்கிருந்த வீட்டின் சறுக்குச் சன்னலைத் திறந்து, சன்னலுக்கு அருகே படுத்திருந்த 23 வயது பெண்ணைத் தொந்தரவு செய்து, சினமூட்டினார். இதற்காக அந்த ஆடவருக்கு $2,500 அபராதம் விதிக்கப்பட்டது. மானபங்கச் செயல் 2016ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி காலை 5.45 மணிக்கு நடந்தது என்றும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த செயல் 2012ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பின்னிரவு 2 மணிக்கு நடந்தது என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.