பணிப்பெண்ணையும் கர்ப்பிணியையும் மானபங்கப்படுத்திய ஆடவருக்கு சிறை

பணிப்பெண்ணையும் கர்ப்பிணியையும் மானபங்கப்படுத்திய ஆடவருக்கு சிறை

1 mins read

ஒரு மணி நேரத்துக்குள் பணிப்பெண் ஒருவரையும் கர்ப் பிணி பெண் ஒருவரையும் இரு வெவ்வேறு சம்பவங்களில் மானபங்கப்படுத்திய வாடிக்கையாளர் சேவை அதிகாரிக்கு நேற்று 10 மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மாணிக்கம் சந்தர் எனும் அந்த 28 வயது ஆடவர் அந்த இரு குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு மியன்மார் பணிப்பெண்ணை மின்தூக்கியிலும் 30 நிமிடங் கள் கழித்து 27 வயது கர்ப்பிணிப் பெண்ணை வெஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள மின்தூக்கியிலும் மானப்படுத்தி யதை மாணிக்கம் ஒப்புக்கொண்டார். இச்சம்பவங்கள் மின்தூக்கி கண்காணிப்பு கேமராக் களில் பதிவாகியிருந்தன. அதேநாள் இரவு 7 மணிக்கு மாணிக்கம் கைது செய்யப்பட்டார். சம்பவங்களின்போது தான் மதுபோதையில் இருந்ததாக மாணிக்கம் கூறியிருந்தார்.