நீண்ட கால பொருளாதார உதவி நிதியைப் பெறுவதற்காக தன்னை "நிரந்தரமாக வேலைக்குச் செல்ல இயலாது" என்று மருத்துவர் எழுதிய கடிதம் போல போலியான ஒன்றைத் தயாரித்து கையெழுத் திட்ட வேலை இல்லாத 40 வயது ஆடவர் லியு டியன்ஃபுவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள் ளது. மேலும், கூ டெக் புவாட் மருத் துவமனை ஊழியருக்கு தவறான முறையில் கடும் வார்த்தைகளைக் கொண்டு மின்னஞ்சல் அனுப்பிய குற்றத்திற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வேலை நிலை பற்றிய மருத் துவ சான்றிதழை போலியாக தயா ரித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்ற நினைத்த தையும் டாக்டர் லீ யுன் வெய்யைப் போலவே கையெழுத்திட்டதையும் அவர் ஒப்புக்கொண்டார். மருத்துவமனைக்கு அவர் செலுத்தவேண்டிய கட்டணத்தை வசூலிக்க நியமிக்கப்பட்ட ஊழி யரை தற்கொலை செய்து கொள் ளும்படி அந்த ஆடவர் கூறியுள் ளார்.
போலி ஆவணங்களை கொண்டு அமைச்சு அதிகாரிகளை ஏமாற்றிய ஆடவருக்கு சிறை
1 mins read

