வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்காத நிறுவன இயக்குநருக்கு சிறை

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்காத நிறுவன இயக்குநருக்கு சிறை

1 mins read

நிறுவனத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய ஊதியத்தை யும் அவர்களுக்கான தங்கும் வசதியையும் வழங்காத லியன் ஹுப் சின் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவ னத்தின் இயக்குநர் 27 வயது டியோ சூன் சாய்க்கு 12 வார சிறை தண்டனையாக வழங்கப்பட் டுள்ளது. வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் 18 குற்றச்சாட்டுகளும் வெளி நாட்டு வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. மேலும் 22 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டதாக மனி தவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆறு ஊழியர்களுக்கு மொத் தம் $15,000க்கு மேலான ஊதி யத்தை நிறுவனம் இன்னும் வழங்கவில்லை என்றும் நிறுவனம் தனது சட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.