மின் ஸ்கூட்டர் கடையில் பேட்டரி வெடித்து இருவர் காயம்

மின் ஸ்கூட்டர் கடையில் பேட்டரி வெடித்து இருவர் காயம்

1 mins read

டெல்டா ஹவுஸில் உள்ள மின் ஸ்கூட்டர் விற்கும் கடையில் நேற்று காலை பேட்டரிகள் வெடித்து இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 வயதுள்ள ஆடவரும் 30களில் உள்ள பெண்ணும் தீ காயங்களுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் அந்தக் கடையின் ஊழியர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அலெக்சாண்ட்ரா சாலையில் உள்ள கட்டடத்தின் ஆறாவது மாடியில் உள்ள அந்தக் கடையில் தீ ஏற்பட்டது. தீயணைப்புக் கருவியைக் கொண்டு அந்தத் தீ அணைக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.