வரும் ஜனவரி மாதத்தின் வார இறுதிகளில் கிழக்கு-மேற்கு தடத்தின் பத்து எம்ஆர்டி நிலையங்களில் சேவை நேரம் குறைக்கப்படும் எனவும் இரண்டு ஞாயிறுகள் அவற்றில் ரயில் சேவை இருக்காது என்றும் எஸ்எம்ஆர்டி தெரிவித்துள்ளது. அந்த நாட்களில் ரயில் பராமரிப்பு, புதுப்பிப்புப் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்படுவதுடன் புதிய சைகை அமைப்பில் சோதனை களும் மேற்கொள்ளப்படும்.
பாசிர் ரிஸ் முதல் பாய லேபார் வரையிலான 8 நிலையங்கள், எக்ஸ்போ, சாங்கி விமான நிலை யம் ஆகிய 10 நிலையங்களில் அடுத்த மாதம் 21, 28 ஆகிய தேதிகளில் ரயில் சேவை இருக்காது. இந்த நிலையங்களில் ஜனவரி முழுவதும் வார இறுதிகளில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே ரயில் சேவை இருக்கும். இந்த நிலையங்களுக்கிடை யில் ரயில் சேவை இல்லாத நாட்களில் இலவச பேருந்துச் சேவை வழங்கப்படும் எனவும் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.

