சந்திப்பின் குறுக்குவிட்டத்தில் சாலையைக் கடக்கும் திட்டம் ஆர்ச்சர்ட்டில் தொடங்கியது

சந்திப்பின் குறுக்குவிட்டத்தில் சாலையைக் கடக்கும் திட்டம் ஆர்ச்சர்ட்டில் தொடங்கியது

1 mins read

கேன்ஹில் ரோடு, ஆர்ச்சர்ட் சாலை ஆகியவற்றுக்கு இடைப் பட்ட சாலைச் சந்திப்பில் 'ஸ்கிராம்பிள்-கிராசிங்' எனப் படும் குறுக்குவிட்டத்திலும் சாலையைக் கடக்கும் திட்டம் நேற்று பரிசோதனை முறையில் அறிமுகம் கண்டது. இது பாதசாரிகளுக்கு வசதி யாக இருந்ததாகச் சொல்லப்படு கிறது. பாதசாரிகளுக்கு உகந்த தாக ஆர்ச்சர்ட் வட்டாரத்தை ஆக்குவதற்கான முயற்சிகளில் ஒன்றாக இந்தத் திட்டத்தை ஆர்ச்சர்ட் ரோடு வர்த்தக சங்கத்தின் தலைவர் மார்க் ஷா மூன்று வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.