இஸ்தானா வாசலில் மோதிய கார்; இருவர் பலி ஒருவர் காயம்

இஸ்தானா வாசலில் மோதிய கார்; இருவர் பலி ஒருவர் காயம்

1 mins read
4d0cec23-9a2c-45d3-ba63-6adb614eee27
-

கேவெனா ரோட்டில் இஸ்தானா வுக்கு வெளியே அதன் வாசலின் மீது மோதிய காரில் இருந்த இருவர் உயிரிழந்தனர். மற்றோர் ஆடவர் டான் டோக் செங் மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து நேற்று காலை 6.06 மணிக்கு தகவல் கிடைத்த தாக போலிசார் தெரிவித்தனர். காரில் இருந்த 25 வயது ஓட்டுநர், 21 வயது பெண் பயணி ஆகியோர் நினைவு தப்பிய நிலை யில் டான் டோக் செங் மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட் டனர். அங்கு அவ்விருவரும் இறந்துபோனதாகச் சொல்லப் பட்டது. விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநர் பெயர் கைருல் அன்வார் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. 28 வயதான மற்றொரு பயணி சுயநினைவுடன் இருந்ததாகவும் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட் டிருப்பதாகவும் கூறப்பட்டது.