இஸ்தானாவுக்கு வெளியே அதன் வாயிற்சுவர் மீது நேற்று முன்தினம் கார் மோதிய விபத்து பற்றிய தகவல்களையும் படங்களையும் போலிசார் திரட்டிகொண்டிருக்கின்றனர். கேவெனா ரோட்டில் நடந்த இந்த விபத்தில் 25 வயது கார் ஓட்டுநரான கைருல் அன்வரும் 21 வயது பெண் நூருல் ஃபில்சாவும் மரணமடைந்தனர். 28 வயது ஆடவர் ஜொஹாரி சரிஃப் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த விபத்து சம்பந்தமான புகைப்படங்களோ வீடியோ காட்சிகளோ யாரிடமாவது இருந்தால் www.police.gov. sg/e-services அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையப்பக்கத்தில் சமர்ப்பிக்குமாறு நேற்று போலிஸ் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டது. சமர்ப்பிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்றும் போலிசார் தெரிவித்தனர். இதற்கிடையில், மோதிய காரின் புகைப்படங்கள் 'வாட்ஸ்அப்' மற்றும் இதர சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

