பயங்கரவாதம் சார்ந்த நடவடிக் கைகளுக்காக 2002 முதல் உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 80 சிங்கப்பூரர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட தாக உள்துறை அமைச்சு அண்மை யில் வெளியிட்ட புள்ளிவிவரங் கள் காட்டுகின்றன. மத்திய கிழக்கில் 'ஐஎஸ்' அமைப்பு இழப்புகளைச் சந்தித்தும், பிலிப்பீன்ஸின் மராவியில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புள்ள போரா ளிகள் வீழ்த்தப்பட்டும், சிங்கப்பூர் எதிர்நோக்கும் பயங்கரவாத மிரட் டல் தொடர்ந்து உச்ச நிலையில் இருப்பதை இந்தப் புள்ளிவிவரங் கள் எடுத்துக்காட்டுகின்றன.
"வட்டார நாடுகளிலுள்ள பாது காப்பு அமைப்புகளும் பயங்கரவா தத்தை முறியடிக்கும் முயற்சிகளை முடுக்கிவிட்டு, ஏராளமானோரைக் கைது செய்துள்ளன," என்று உள் துறை அமைச்சர் கா.சண்முகம் (படம்) சேனல் நியூஸ்ஏஷியா ஒளி வழிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

