மானபங்கத்திற்கு இலக்காகும் ஆண்கள் விகிதம் அதிகரிப்பு

மானபங்கத்திற்கு இலக்காகும் ஆண்கள் விகிதம் அதிகரிப்பு

1 mins read

பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் அச்சுறுத்தல் பற்றி அண்மையில் பல செய்திகள் வெளி வருகையில், பாலியல் தொல்லைக்கு இலக்கா கும் ஆண்களும் சிறுவர்களும் அதிகரித்து வருவது எளிதில் கவ னிக்கப்படாமல் போய்விடக்கூடும். சிங்கப்பூரில் சென்ற ஆண்டு 98 ஆண்கள் மானபங்கம் செய்யப் பட்டதாக போலிசின் புள்ளிவிவ ரங்கள் காட்டுகின்றன. மானபங்கத்திற்கு இலக்கான வர்களில் இது 7%. கடந்த 2010ம் ஆண்டில் 74 ஆண்கள் மான பங்கம் செய்யப்பட்டனர். இது அவ்வாண்டின் மொத்த எண் ணிக்கையில் 5% ஆக இருந்தது.

போலிசிடம் புகார் செய்வோரின் எண்ணிக்கை 2010 முதல் அதிக ரித்திருந்தாலும், இது உண்மை நிலவரத்தை எடுத்துக்காட்ட வில்லை என்று ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பேட்டி கண்ட சமூக சேவையாளர்கள், மருத்துவத் துறையினர், வழக்கறிஞர்கள் கூறி னர். மானபங்கத்திற்கு இலக்காகும் பலரும் அவமான உணர்வாலும், அந்தரங்கத்தைப் பாதுகாக்கவும் பொதுவாகப் புகார் செய்வதில்லை என்று அவர்கள் கூறினர். இருந்தாலும், ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள் போன்ற அதிகமான வாழ்க்கைத்தொழிலர் கள் பாலியல் தொல்லைக்கு இலக் காகும் இள வயதினரை அடையா ளம் காண பயிற்சி பெற்றிருப்பதால் புகார் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கலாம் என்று ஃபெய் யுவே சமூக சேவை அமைப் பின் இளையர் சேவைப் பிரிவு தலைவர் குமாரி ஐரிஸ் லின் கூறி னார்.