கிறிஸ்மஸ், புத்தாண்டு ஆகிய நாட்களின் முன்தினம் வடக்கு=கிழக்குப் பாதை, டௌன்டவுன் பாதை, செங்காங்=பொங்கோல் எல்ஆர்டி ஆகிய ரயில் சேவைகளும் 24 பேருந்து சேவைகளும் வழக்கத்தைவிட கூடுதல் நேர சேவை வழங்கும். இம்மாதம் 24ஆம் தேதி சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயணிகள் புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு வீடு திரும்புவதற்கு உதவும் வகையில் புத்தாண்டுக்கு முன்தினம் குறைந்தது 2 மணி நேரம் ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு ஞாயிறுகளிலும் கடைசி வடக்கு-கிழக்கு ரயில் வந்தடையும் வரை இலகு ரயில் சேவை இயங்கும். அவ்விரு நாட்களிலும் 33, 51A, 60A, 63M, 133, 181, 222, 225G, 228, 229, 232, 238, 240, 241, 243G, 261, 269, 291, 292, 293, 315, 325, 400, 410W ஆகிய 24 பேருந்து சேவைகளும் நீட்டிக்கப்படும்.
கிறிஸ்மஸ், புத்தாண்டுக்கு முன்தினம் ரயில், பேருந்து சேவைகள் நீட்டிப்பு
1 mins read

