அங் மோ கியோவில் லாரியும் கார் ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் நால்வர் காயமடைந்தனர். சிறிய அளவில் காயமுற்ற அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பேச்சாளர் கூறினார். நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் அங் மோ கியோ அவென்யூ 5க்கும் 8க்கும் இடையிலான சாலை சந்திப்பில் இரு வாகனங்களும் மோதிக்கொண்டன. விபத்துக்குள்ளான லாரி, சாலையின் சில தடங்களை மறித்தபடி கவிழ்ந்திருந்ததைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. விபத்து தொடர்பாக போலிஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று அறியப்படுகிறது.
லாரி கவிழ்ந்து நான்கு பேர் காயம்
1 mins read

