கட்டுமானத் தளத்தில் கீழே விழுந்து ஊழியர் மரணம்

கட்டுமானத் தளத்தில் கீழே விழுந்து ஊழியர் மரணம்

1 mins read
Google News Preferred Icon

தெம்பனிஸ் அவென்யூ 10ல் கட்டப்பட்டு வரும் 'தி ஆல்ப்ஸ் ரெசிடன்சஸ்' கட்டுமானத் தளத்தின் 10வது மாடியிலிருந்து வெளிநாட்டு ஊழியர் ஒருவர் நேற்று காலை கீழே விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 51 என்றும் அவர் சீனாவைச் சேர்ந்தவர் என்றும் அறியப்படுகிறது. 10வது மாடியில் வேலை செய்துகொண்டிருந்த அவர், கீழே விழுந்து நான்காவது மாடியில் கிடந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. கட்டுமானத் தளத்தில் அனைத்து வேலைகளையும் நிறுத்தி வைக்கும்படி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.