மலேசியாவின் வாகன நுழைவு அனுமதி செயல்முறை தாமதமாகலாம்

மலேசியாவின் வாகன நுழைவு அனுமதி செயல்முறை தாமதமாகலாம்

1 mins read

அடுத்த மாதம் அமலாக்கப்பட இருந்த மலேசியாவின் வாகன நுழைவு அனுமதி தாமதமாக அறிமுகப்படுத்தப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய செயல்முறையைச் சரிபடுத்த சற்று கால அவகாசம் தேவைப்படுவதே தாமதம் ஏற்பட காரணம் என்றும் அனைத்து செயல்பாடுகளும் சரியான முறையில் இயங்குவதை உறுதி செய்தபின்னரே அதனை அம லாக்க அரசாங்கம் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. வடக்கில் தாய்லாந்துடனான எல்லையிலும் தெற்கில் சிங்கப்பூருடனான எல்லையிலும் இந்தப் புதிய செயல்முறை அமலாக்கப்படும். தாய்லாந்துடனான எல்லையில் புதிய செயல்முறையை செயல்படுத்த இன்னும் அதிக அவகாசம் தேவைப்படும். புதிய செயல்முறை சரிவர வேலை செய்வதை உறுதி செய்த பின் இரு எல்லைகளிலும் ஒரே நேரத்தில் வாகன நுழைவு அனுமதி செயல்முறை அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சு கூறியது.