கிழக்கு-மேற்கு ரயில் தடத்தின் புதிய சமிக்ஞை முறை பயணச் சேவையில் அமலாக்கப்படுவதற்கு முன்பாகப் பாவனைச் சோதனை மையத்தில் சோதிக்கப்படும். சோதனை முறைகளை வலுப் படுத்துவது இதன் நோக்கம் என நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது. சென்ற மாதம் நடந்த ரயில் மோதல் சம்பவம் பற்றி புலனாய்வு விசாரணையின் முடிவுகளை அறி வித்தபோது ஆணையம் இவ் விவரத்தை வெளியிட்டது. விசாரணையின் முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்ட விவ ரங்களுடன் ஒத்திருப்பதாக ஆணையம் தெரிவித்தது.
நவம்பர் 15ஆம் தேதி கிழக்கு =மேற்கு ரயில் தடத்தின் பழைய, புதிய சமிக்ஞை முறைகளுக்கு இடையிலான பொருத்தமின்மை பிரச்சினையால் ஜூ கூன் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டன. இச்சம்பவத் தில் 38 பேர் காயமடைந்தனர். தொடர்பு அடிப்படையிலான புதிய ரயில் கட்டுப்பாட்டு முறையை விநியோகிக்கும் பிரெஞ்சு நிறு வனமான தாலஸ், சிங்கப்பூரில் பாவனைச் சோதனை மையத்தை அமைக்கும் என ஆணையம் நேற்று தெரிவித்தது.

