வெஸ்ட் கோஸ்ட் வேல் பகுதியில் பொது ஏலக்குத்தகை மூலம் குடியிருப்பு இடம் ஒன்றின் விற்பனையை நேற்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தொடங்கியது. அந்த இடத்தை $379.988 மில்லியன் தொகைக்கு ஏலக்குத்தகையில் ஒருவர் கேட்டார். அந்த இடம் 99 ஆண்டு குத்தகைக்கு உரியது. அது 19,591.5 சதுர மீ. பரப்பளவு உள்ளது. அனுமதிக்கப்படும் மொத்தத் தரைப்பரப்பு 54,857சதுர மீ. ஏலக்குத்தகையில் கேட்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச தொகையைவிட இன்னும் குறைவாக யாரேனும் கேட்டால் அந்தக் கோரிக்கை ஏற்கப்படாது என்று ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
வெஸ்ட் கோஸ்ட் வேல் பகுதியில் வீடுகட்ட இடம் விற்பனை
1 mins read

