சிங்கப்பூரின் மிகவும் ஆழமான சுரங்கம் அடுத்த ஆண்டு ஜூலை யில் கட்டி முடிக்கப்பட்டுவிடும். அந்தச் சுரங்கம் எதிர்காலத்தில் சிங்கப்பூருக்கு தேவைப்படும் மின் சாரம் தடையின்றி கிடைக்க வகை செய்யும். சிங்கப்பூரின் மின்சாரத் தேவை வருங்காலத்தில் கணிசமாக அதி கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இந்தத் தேவையை செவ்வனே பூர்த்தி செய்வதற்காக 40 கி.மீ. நீளத்திற்குச் சுரங்கம் அமைக்கப்படுகிறது. அந்தச் சுரங்கத்தில் குறைந்த பட்சம் 1,200 கி.மீ. நீளத்திற்கு உயர்அழுத்த மின்கம்பிகள் வேயப் படும். இந்தக் கம்பிகளின் நீளம், சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக் கும் இடைப்பட்ட தொலைவைப் போல மூன்று மடங்கிற்கும் அதிக மாகும் என்று எஸ்பி குழுமம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய சுரங்கப்பாதை பூமிக்குக் கீழே குறைந்தபட்சம் 60மீ. ஆழத் தில் அமைக்கப்படுகிறது. $2.4 பில்லியன் செலவில் உருவாகி வரும் இந்தச் சுரங்கப்பாதை 20 மாடி வீவக புளோக் அளவுக்கு ஆழமானது. இது 120 ஆண்டு களுக்குச் சேவையாற்றக் கூடியது. சிங்கப்பூரின் ஆக ஆழமான இந்தச் சுரங்கப்பாதைப் பணி 2012ல் தொடங்கியது. படம்: சாவ் பாவ்
40 கி.மீ. நீளத்திற்குச் சுரங்கம் அமைக் கப்படுகிறது. அந்தச் சுரங்கத்தில் குறைந்தபட்சம் 1,200 கி.மீ. நீளத்திற்கு உயர்அழுத்த மின்கம்பிகள் வேயப்படும் என்று தெரிவிக்கப் பட்டது.

