$40மி. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணத்தைப் பெற தில்லுமுல்லு

$40மி. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணத்தைப் பெற தில்லுமுல்லு

1 mins read
89b7c9ac-80f7-4645-8d44-1a2daaa39296
-

போலியான கோரிக்கைகளை அனுப்பி ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட் டத்திலிருந்து $40 மில்லியன் தொகையை ஒரு சட்டவிரோத கும்பல் சுருட்டியிருக்கிறது. சிங்கப்பூரில் அரசாங்க அமைப் பில் நடந்துள்ள ஆகப்பெரிய தில்லுமுல்லு விவகாரம் இதுவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏமாற்றுச் செயலில் சம் பந்தப்பட்டு இருப்பதாகக் கூறப் படும் 41 வயது ஆடவர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் முன் னிலைப் படுத்தப்பட்டார். இங் செங் குவீ என்ற அந்த ஆடவர் மீது மூன்று குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டன. இந்த விவ காரத்தில் சட்டவிரோதக் கும்பல் ஒன்று சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்றும் முக்கியமான தில்லுமுல்லு பேர்வழிகளில் இங் ஒருவர் என்று நம்பப்படுவதாகவும் அரசுத்தரப்பு வழக்குரைஞர் விக்டோரியா டிங் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு முன்னதாக இங் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. தில்லுமுல்லு செய்தவற்கான ஒரு சதித்திட்டத்தில் அவர் ஈடுபட் டிருந்ததாக அந்தக் குற்றச்சாட்டு கூறுகிறது. குற்றவியல் காரியங்கள் மூலம் கிடைத்தவற்றை மறைத்து வைத் திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. இதில் $6.7 மில்லியன் பணம், சுமார் $600,000 மதிப்புள்ள 11 கிலோ தங்கம் ஆகியவை அடங்கும்.

இங் செங் குவீ, 41, ஏறக்குறைய $40 மில்லியன் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணத்தை ஏமாற்றியிருக்கிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்