புள்ளிவிவரத்துறை நடத்தும் 11வது குடும்பச் செலவு கருத்துக் கணிப்பு இம்மாதமும் அடுத்த மாதமும் நடக்கவிருக்கிறது. குறிப்பிட்ட குடும்பங்கள் இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கெடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புக்கிட் பாஞ்சாங், ஹவ்காங், காலாங், ஊட்ரம், குவீன்ஸ் டவுன், ரிவர் வேலி, சிங்கப்பூர் ஆறு, தெம்பனிஸ், தோ பாயோ, யீஷூன் ஆகிய வட்டாரங்களில் குடியிருக்கும் குடும்பங்கள் இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கு பெறுவர். இவ்வாண்டு அக்டோபர் மாதம் இந்தக் கருத்துக்கணிப்பு தொடங்கப்பட்டது. 13,100 குடும்பங்கள் 26 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஓராண்டு காலத்திற்கு கருத்துக் கணிப்பில் பங்கு கொள்ளும். இந்த 11வது கருத்துக்கணிப் பில் 7வது, 8வது குழுக்களைச் சேர்ந்தவர்கள் பங்கு பெறுகிறார்கள். கருத்துக் கணிப்பு மேற்கொள்ளும் அதிகாரிகள் அதிகாரபூர்வ அடையாள அட்டைகளையும் புள்ளிவிவரத் துறையின் அதிகாரம் வழங்கும் கடிதத்தையும் வைத்திருப்பார்கள்.
குடும்பச் செலவு குறித்து கருத்துக்கணிப்பு
1 mins read

