விழாக்காலத்தை ஒட்டி எம்ஆர்டி, பேருந்து சந்திப்பு நிலையங்களில் இசை நிகழ்ச்சி

விழாக்காலத்தை ஒட்டி எம்ஆர்டி, பேருந்து சந்திப்பு நிலையங்களில் இசை நிகழ்ச்சி

1 mins read

நேற்று முதல் கிறிஸ்மஸ் முன்தினம் வரை குறிப்பிட்ட எம்ஆர்டி நிலையங்களிலும் பேருந்து சந்திப்பு நிலையங்களிலும் இசை நிகழ்ச்சியும் இதர படைப்புகளும் நடத்தப்படுகின்றன. விழாக்கால குதூகலத்தைப் பரப்பும் வண்ணம் எஸ்எம்ஆர்டி நிறுவனம் வெவ்வேறு மேடை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. கிறிஸ்மஸ் தினம் வருவதை முன்னிட்டு முதல் முறையாக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளைத் தவிர கிறிஸ்மஸ் சார்ந்த ஸ்டிக்கர்கள் பயணிகளுக்கு வழங்கப்படும். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கிழக்கு=மேற்கு பாதை, வடக்கு=தெற்கு பாதை, வட்ட பாதை ஆகியவற்றின் ரயில் நிலையங்களிலும் முக்கிய பேருந்து சந்திப்பு நிலையங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். விழாக்காலத்தை முன்னிட்டு நிலையங்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.