இன்று முதல் மோட்டார்சைக்கிள் ஓட்டிகளும் கனரக வாகன ஓட்டு நர்களும் பொது கார் நிறுத்தும் இடங்களில் கூப்பன்களுக்குப் பதிலாக Parking.sg செயலி மூலம் கட்டணம் செலுத்த முடியும். இதையடுத்து, எல்லாவித வாக னங்களும் இனி இந்தச் செயலி யைப் பயன்படுத்த முடியும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், அரசாங்க தொழில்நுட்ப அமைப்பு ஆகியவை இணைந்து கூட்டு அறிக்கை மூலம் தெரிவித்தன. தற்போதைய விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களுக்கு ஒரு நாள் அல்லது ஓர் இரவிற்கு அதிக பட்சமாக 65 காசு மட்டும் வசூலிக்கப்படும். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அறிமுகம் கண்ட இச்செயலியை இதுவரை கார் ஓட்டுநர்கள் மட்டும் பயன்படுத்த முடிந்தது.
இப்போது 152,000 கார்கள் இந்தச் செயலி யைப் பயன்படுத்தி வருவதாகவும் ஒரு மில்லியனுக்கும் மேலான கார் நிறுத்தும் காலங்கள் அதன் மூலம் பதியப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது. அத்துடன், ஆப்பிள் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு சாதனங்கள் வாயி லாக 300,000க்கும் மேற்பட்ட முறை இந்தச் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. காகித கூப்பன்களைப் பயன் படுத்தி வரும் 1,100 பொது கார் நிறுத்தப் பூங்காக்களில் வாகன ஓட்டிகள் மின்னிலக்க முறையில் கட்டணம் செலுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

