டெங்கி பாதிப்பு குறைந்தது

டெங்கி பாதிப்பு குறைந்தது

1 mins read

கடந்த பதினாறு ஆண்டுகளில் இல்லாத வகையில் இவ்வாண்டில் டெங்கி காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது. இவ்வாண்டின் முதல் 50 வாரங்களில் 2,629 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இது, சென்ற ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க 10,000 பேர் குறைவு. 2017ஆம் ஆண்டு முடிவுக்கு வர கிட்டத்தட்ட இன்னும் இரு வாரகாலம் இருந்தாலும் இந்த ஆண்டில் டெங்கியால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை, கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அள வைவிட குறைவாகவே இருக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2001ஆம் ஆண்டில் 2,372 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர். 2016ஆம் ஆண்டில் 13,100 பேருக்கு டெங்கி பாதிப்பு ஏற் பட்டது. ஆக அதிகமாக, 2013 ஆம் ஆண்டில் 22,000க்கும் மேற் பட்டோருக்கு டெங்கி தொற்று ஏற்பட்டது. இவ்வாண்டின் ஜனவரி=செப் டம்பர் வரைப்பட்ட காலகட்டத்தில் டெங்கியால் யாரும் இறக்க வில்லை. கடந்த ஆண்டில் 11 வயது சிறுவன் உட்பட ஒன்பது பேர் டெங்கியால் மாண்டனர். பொதுவாக, டெங்கியால் பாதிக் கப்பட்ட ஐந்தில் ஒருவர் மருத்துவ மனையை நாட வேண்டியிருந்தது.