எஸ்எம்ஆர்டி சேவையை மேம்படுத்த புதிய தலைமைப் பதவி உருவாக்கம்

எஸ்எம்ஆர்டி சேவையை மேம்படுத்த புதிய தலைமைப் பதவி உருவாக்கம்

1 mins read

எஸ்எம்ஆர்டி நிறுவனம் அதன் ரயில் சேவையின் தரத்தை மேம் படுத் தும் நோக்கில் 'பயணிகள் தொடர்பு தலைமை அதிகாரி' என்னும் புதிய பதவியை உரு வாக்கி அதற்கு ஒருவரை நிய மனம் செய்துள்ளது. ரயில் சேவைத் தரத்தை மேம் படுத்தும் வகையில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவ்வகையில் இதுவும் ஒன்று என்று அந் நிறுவனத் தின் தலைவர் சீ மூன் மிங், சீன நாளிதழான சாவ்பாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரி வித்தார். அப்போது அவர், "பயணிகளை முன்னிறுத்தி தக்க நேரத்தில், நல்ல பயன் தரக்கூடிய வகையில் அவர்களது கருத்துகளுக்கு செவிமடுப்பது மிக முக்கியம்," என்றார்.