மின்சார பயனீட்டை அளவெடுக்க புதிய கட்டமைப்பு

மின்சார பயனீட்டை அளவெடுக்க புதிய கட்டமைப்பு

1 mins read

மின்சாரப் பயனீட்டைத் இணையத்தின் வழி உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய அளவெடுக்கும் கருவியான மீட்டருக்கான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவன மான சிங்டெல்லும் ஈடிஎம்ஐ என் னும் நிறுவனமும் இணைந்து இதற் கான உருவாக்கப் பணியில் ஈடுபடவுள்ளதாக சிங்டெல் நிறுவனம் நேற்று அறிவித்தது. சிங்டெல்லின் ஐஓடி என்னும் இணையக் கட்டமைப்பில் இணைத் துப் பயன்படுத்தும் வகை யில் இந்த திறன்மிகு மின் சார அளவெடுக்கும் கருவி கள் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டன. ஐஓடி கட்டமைப்பு மூலம் இந்த புதிய திறன் மீட்டர் கருவியைப் பயன்படுத்தும்போது, பாதுகாப் பான கம்பியற்ற இணைப்பு முறை யில் பயன்பாட்டு அளவு பற்றிய தரவுகள் பெறப்படும்.