சிங்கப்பூர் - கோலாலம்பூர் அதிவேக ரயில்: சொத்து நிறுவனத்திற்கான ஏலக்குத்தகை

சிங்கப்பூர் - கோலாலம்பூர் அதிவேக ரயில்: சொத்து நிறுவனத்திற்கான ஏலக்குத்தகை

1 mins read

சிங்கப்பூர் = கோலாலம்பூர் அதி விரைவு ரயில் திட்டப்பணி தொடர் பாக சொத்து நிறுவனத்தை அமைக்க மலேசியா, சிங்கப்பூர் நிறுவனங்கள் ஏலக் குத்தகைக்கு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. வடிவமைப்பு, கட்டுமானம், நிதி யளிப்பு, இருப்புச் சரக்குகளின் பராமரிப்பு ஆகியவற்றுக்குச் சொத்து நிறுவனம் பொறுப்பேற்கும். குத்தகைக்கு விண்ணப் பிக்க விரும்புவோர், அடுத்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதிக்குள் இரு நிறுவனங்களிடமும் பரிந் துரை களைத் தாக்கல் செய்ய வேண் டும் என அறிக்கை தெரி வித் தது. மைஹெச்எஸ்ஆர் நிறு வனம், மலேசிய நிதி அமைச்சின் கீழ் ரயில் திட்டப்பணிக்குப் பொறுப்பேற்கும் ஒரு பிரிவாகும். ஏலக்குத்தகை தொடர்பான விளக்கவுரை ஜனவரி 23ஆம் தேதி கோலாலம்பூரில் நடத்தப் படும்.