உங்கள் சொந்தத் தகவல்களை, கடன்அட்டை விவரங்களைக் கேட்டு டிபிஎஸ் வங்கி அல்லது சிங்கப்பூர் ஏர்லைன்சிடமிருந்து உங்களுக்கு மின்னஞ்சல் வந் தால் எச்சரிக்கையாக இருங்கள். அவற்றை நம்பி உங்கள் தகவல்களைக் கொடுத்து விடாதீர்கள் என்று போலிஸ் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது. அத்தகைய மின்னஞ்சல்களை நம்பி தாங்கள் ஏமாந்துவிட்டதாக போலிசிடம் பலர் புகார் தெரி வித்து இருக்கிறார்கள். அத்தகைய தில்லுமுல்லு பேர் வழிகளிடம் அவர்கள் பணத்தைப் பறிகொடுத்து இருக்கிறார்கள். பொதுமக்கள் 1800-722-6688 என்ற நேரடி தொலைபேசி எண் மூலமோ www.scamalert.sg என்ற மின்னஞ்சல் வழியாகவோ தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.
இணையத்தில் போலியான மின்னஞ்சல் பற்றி எச்சரிக்கை
1 mins read

