ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் ஒருவரிடம் அனுமதியின்றி ரகசிய தகவலைத் தெரிவித்ததன் மூலம் அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தை மீறியதற்காக இங் ஹான் யுயான், 25, என்ற அரசாங்க ஊழியருக்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் தில் மறுவிற்பனை பிரிவில் குடி யிருப்புப் பேட்டை நிர்வாகியாகப் பணியாற்றும் இங், இந்த ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்கும் ஜூலை மாதம் 16ஆம் தேதிக்கும் இடையில் ஜானிஸ் டாய் ஜியா லிங் என்ற செய்தியாளரிடம் அந்தத் தகவலைத் தெரிவித்தார் என்று நீதிமன்ற விசாரணையில் குறிப்பிடப்பட்டது. 'மறுவிற்பனை நடைமுறையை செம்மையாகத் திருத்தி அமைப் பது' என்ற வீவக திட்டத்தைப் பற்றிய தகவலை குமாரி டாயிடம் இங் தெரிவித்திருந்தார். அந்தத் திட்டம் ஒரு புதிய வீவக கணினிக் களஞ்சியம் தொடர்பானது. குற்றச்செயல் நடந்தபோது அந்தத் திட்டம் பற்றி பகிரங்கமாக அறிவிக்கப்பட வில்லை. அப்போதுதான் அது தீட்டப்பட்டு வந்தது.
$2,000 அபராதம் விதிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் இங் ஹான் யுயான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

