புளோக் நடைபாதையில் இருந்த குளிர்சாதனப் பெட்டிகள் அகற்றம்

புளோக் நடைபாதையில் இருந்த குளிர்சாதனப் பெட்டிகள் அகற்றம்

1 mins read
545eee0b-4ffe-4753-8f6d-ecaa8f2046ef
-

சீமெயில் இருக்கும் வீவக புளோக் ஒன்றின் நடைபாதைக்கு வெளியே இருந்த ஏழு குளிர்சாதனப் பெட்டிகள் அகற்றப்பட்டு இருப்பதாக நகர மன்றம் தெரிவித்து இருக்கிறது. சீமெய் ஸ்திரீட் 1ல் இருக்கும் 136வது புளோக்கின் பொது நடைபாதையில் அந்தக் குளிர்சாதனப் பெட்டிகள் இருந்ததாக திருவாட்டி ஷென் என்ற ஒரு மாது புகார் தெரிவித்திருந்தார். அப்படி அந்தப் பெட்டிகள் அங்கு இருப்பதால் தீ விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரித்து இருந்தார். இந்த விவகாரம் பற்றி தங்களுக்குத் தெரியும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்ட உடனேயே அந்தப் பெட்டிகளை அகற்றும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் ஈஸ்ட் கோஸ்ட் ஃபெங்ஷான் நகர மன்றம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. அந்தப் பெட்டிகள் ஒரு நிறுவனத்தின் முதலாளியான ஒரு மாதுக்குச் சொந்த மானவை என்பது தெரியவந்தது.

புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து குளிர்சாதனப் பெட்டிகள் அகற்றப்பட்டன. படம்: ‌ஷின் மின், ஈஸ்ட் கோஸ்ட் ஃபெங்ஷான் நகர மன்றம்